வியாழன், 26 ஜனவரி, 2012

மின்னல் பக்கங்கள்-1





ஜோர்டனில் ஆறு நாட்கள் சுற்றி திரித்த பொது ,ஐந்தாவது நாள் ,தங்கியிருந்த ஹோட்டலின் (அதை ஹோட்டல் என்பதை விட  ஹாஸ்டல் எனலாம் .குறைந்த கட்டணம் ,காலை உணவு ,டீ,அரபிக் காபியுடன் )லாபியில் நுழைந்த பொது தான் அந்த மனிதரை பார்த்தேன் .
        பார்த்தவுடன் சிநேகத்துடன் சிரித்து "ஹலோ " என்ற அவருக்கு எப்படியும் வயது 5௦ இருக்கலாம் என தோன்றியது .இந்த  விசயத்தில்  நம்மவர்களை விட வெளி நாடினர் எவளவோ மேல் , தானாக அறிமுகப்படிதிக்கொண்டு புன்னகைப்பதில் .எனக்கு தெரிந்து எந்த இந்தியரும் ,தமிழரும் முதல் சந்திப்பில் முகம் கொடுத்து பேசுவது அரிதாகத்தான் இருந்திருக்கிறது .

புன்னகைத்து ,கை குலுக்கி ,இயல்பாக பேச ஆரம்பித்தார் .அவரது பேச்சிலிருந்து ஆங்கிலம் தாய் மொழியல்ல அவருக்கு என்று தெரிந்தவுடன் ..
"எங்கிருந்து வருகிறீர்கள் "
"ரியோ ,பிரேசில் "
"வாவ்..இங்கே ஜோர்டனில் என்ன செய்கிறீர்கள் "என்றேன் 
"நான் ஒரு பயணி(traveller) " என்றார் 
" ம்ம்ம் ..எங்கெல்லாம் போய் இருக்கிறீர்கள் '
"துபாய் ,ஆஸ்திரேலியா ,ஸ்ரீலங்கா,மாலத்தீவு.ஆப்ரிக்கா இப்போது ஜோர்டனில் ..."
" மை காட் ..அடுத்து எங்கே ?" என்று கேட்டேன் .
"இந்தியா...ஒரு வாரம் கழித்து இந்தியா பயணம்.. முதலில் வாரணாசி ,பிறகு கேரளா "என பயண விவரத்தை அடுக்க ஆரம்பித்தார் .
“'இந்தியாவில் எத்தனை நாள் '
"ஒரு மாதம் பிளான்"
"அப்படினா எத்தனை நாளாய் உங்கள் பயணம் "
"நான் வீட்டை விட்டு கிளம்பி நான்கு மாதங்களாகிறது "என்றார்
பொறாமையில் வயிறு எரிந்து கொண்டிருந்தது .
"உங்கள் மனைவி எங்கே ?" என்று கேட்டேன்.
"அவள் ஊரில் வேலைக்கு   போய்கொண்டிருகிறாள் "
"நீங்கள் " என்றேன் .
"நாம் ரிடையர் ஆகிவிட்டேன் "
"தனியாக ஊர் சுற்றுவது போரடிக்கவில்லையா " என்று கேட்டேன் .

"இல்லை..தனியாக சுற்றி வருவதும் ஒரு விதமான அனுபவம் இல்லையா  " என ஒற்றை வரியில் பதில் .
"உங்கள் வயது என்ன ?" என்று கேட்டேன் .
"58" என்றார் சிரித்துகொண்டே .
           நம் நிலைமையை யோசித்து பார்த்தேன்.பிரயாணங்களுக்கு செலவு செய்வது கிரிமினல் குற்றமாகவே பார்க்கப்படுகிறது ..நம் குடும்பங்களில் .
நான் இத்தாலி க்கி செல்ல விரும்பியதை சொன்ன போது"அங்க போய் என்ன பண்ண போற ? பந்த சேர்த்து வெச்ச பின்னாடி யூஸ் ஆகும் இல்ல " என்ற அறிவுரை வேறு .
         புதிய இடங்களுக்கு செல்வதை ,பிரயாணங்களை அனாவசிய செலவாக கருதும் நம்மவர்களின் மனப்பான்மை மாறும் என்ற நம்பிக்கையுடன் தான் ஒவ்வொரு முறைடும்  பேக் அப்  செய்கிறேன் .
           பிரயாணங்கள்(travel ) வெறும் ஊர் சுற்றுதல் மட்டும் இல்லை.அது ஒரு தனி உணர்வு .வெறும் கட்டடங்களையோ , ஷாப்பிங் செல்லவோ பிரயாணங்கள் தேவை இல்லை .புதிய இடத்தை உணர,புதிய மக்களிடம் பழக,உணர ,புதிய உணவுகளை ஒரு கை பார்க்க ,புதிய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள ......

இரண்டாயிரம் வருடங்களுக்கு மனிதர்கள் தனிப்பட்ட நாகரிகத்தோடு வாழ்ந்த  அந்த நகரத்தில் நடந்து சென்ற போது அடைந்த பிரமிப்பு ,அவர்களது காலடி தடத்தில் ,என் காலடியும்  பதித்த உணர்வு ..இன்றும் என் கனவில் ஜொலிக்கிறது ,அதிகாலையில் பார்த்த ரோஸ் நிற பெட்ரா ( PETRA IN JORDAN  ).

அவரிடம் கடைசியாக கேட்டேன் ..
"என் இப்படி தனியாக சுற்றி கொண்டிருகிறீர்கள் "
"Because I love traveling"
நானும் தான் .
  ---கோபி ...

புதன், 9 நவம்பர், 2011

இதுதான் நான் ..

விஷம் வழிந்தது 
கண்ணில் 
பொய் இருந்தது 
பேச்சில்...
இருந்தும் 
தொ
ர்
கி 
றே
ன்
உன்
அருகாமையின் 
வெப்பதிற்க்காய்.. 

திங்கள், 10 அக்டோபர், 2011

தீராப்பேச்சு

யாரிடமும் பேச 
எதுவுமில்லாத போதும் 
பேச்சு மட்டும் 
தீரவில்லை 
எதிரில்
பேச 
யாருமில்லா போதும் ..
 

சனி, 8 அக்டோபர், 2011

உனக்கு என் கனவுகள்


ஒரே அறையில்
உறங்குகின்றோம் ...
உன் கனவுகள்
உனக்கு
என் கனவுகள்
எனக்கு.

வியாழன், 29 செப்டம்பர், 2011

இறப்பின் 5ம் நாள் ..

 இன்றிலிருந்து
ஐந்தாம் நாள் 
இறப்பேனென தோன்றியது 
கனவில் ...

அனுபவிக்காதவைகளை 
அனுபவிக்க 
முடிக்காதவைகைளை 
முடிக்க 
பார்க்காதவர்களை பார்க்க 
சொல்லப்படாதவைகளை
உணர்த்திவிட 
மதுவின் போதையில் 
திளைத்திட
திட்டமிட்டுகொண்டேயிருந்தேன்...

ஆறாம் நாள் 
இறந்திருந்தேன் 
எதுவும் 
முடிக்கப்படாமல் ..