செருப்பணியாத கால்கள் .
செருப்பணியாத கால்களின்
பொழுது போக்காய்
அமைந்ததை போல
செருப்பணியாத கால்கள்
கவர்கின்றன .
சுத்தமான ,
அழுக்கேறிய ,
சதைபற்றுடன் ,
எலும்புகள் துருத்திய ,
சிலந்தி நரம்புகள் புடைத்த ,
வண்ணம் பூசிய நகங்களுடன் ,
வெட்டபடாத நகங்களுடன் ,
வெடித்த பாதங்களுடன்,
மருதாணி சிவப்புடன்
சிவப்பு ,
கருப்பு ,
மாநிறம்,
வெள்ளை ...
எப்போதும் செருப்பனிந்தே
செல்கிறேன் ..
பார்வையில் படாமல் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக