புதன், 9 நவம்பர், 2011

இதுதான் நான் ..

விஷம் வழிந்தது 
கண்ணில் 
பொய் இருந்தது 
பேச்சில்...
இருந்தும் 
தொ
ர்
கி 
றே
ன்
உன்
அருகாமையின் 
வெப்பதிற்க்காய்.. 

திங்கள், 10 அக்டோபர், 2011

தீராப்பேச்சு

யாரிடமும் பேச 
எதுவுமில்லாத போதும் 
பேச்சு மட்டும் 
தீரவில்லை 
எதிரில்
பேச 
யாருமில்லா போதும் ..
 

சனி, 8 அக்டோபர், 2011

உனக்கு என் கனவுகள்


ஒரே அறையில்
உறங்குகின்றோம் ...
உன் கனவுகள்
உனக்கு
என் கனவுகள்
எனக்கு.

வியாழன், 29 செப்டம்பர், 2011

இறப்பின் 5ம் நாள் ..

 இன்றிலிருந்து
ஐந்தாம் நாள் 
இறப்பேனென தோன்றியது 
கனவில் ...

அனுபவிக்காதவைகளை 
அனுபவிக்க 
முடிக்காதவைகைளை 
முடிக்க 
பார்க்காதவர்களை பார்க்க 
சொல்லப்படாதவைகளை
உணர்த்திவிட 
மதுவின் போதையில் 
திளைத்திட
திட்டமிட்டுகொண்டேயிருந்தேன்...

ஆறாம் நாள் 
இறந்திருந்தேன் 
எதுவும் 
முடிக்கப்படாமல் ..


 

புதன், 28 செப்டம்பர், 2011

நெளிந்து செல்லும் சாலைகள்

பயணத்தின் தாகம் 
தீராமல் 
சாலைகள் 
உதடுகளாய் 
உறிஞ்சுகின்றன  என்னை .

நாக்குகளாய் நெளியும் 
நெடுஞ்சாலைகளும் 
தெருக்களும் 
விழுங்க காத்திருகின்றன 
வெகுகாலமாய் 
வெயில் போர்த்தியும் 
நிலவில் குளித்தும் 
எனக்காய் .

பயமில்லை...
விருப்பத்துடனே
பயணத்தை 
ஆரம்பிக்கிறேன் 
ஓவ்வொரு முறையும் .  




வியாழன், 22 செப்டம்பர், 2011

கல்

கல்லின் 
உள்ளே உறங்கும் 
புத்தனை 
காண முடிகிறது  எனக்கு .

இன்ன பிறரையும் 
அவ்வாறே ..

கல் மட்டுமே 
தெரிகிறது என்கிறாய் 
நீ .

அந்த சிலையை 
உடைத்து 
காண்பிக்கிறேன் ..
கல் 
என்கிறாய் 
மறுபடியும் ...

உள்ளே 
ஒரு ராமனோ 
ஒரு புத்தனோ 
உறங்கிக்கொண்டிருக்கலாம் 
என்பதை மறந்து .

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அவளை 
மொழி பெயர்க்க 
முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்    
 
என் மொழியாவது 
புரிந்திருக்குமா அவளுக்கு ......... 
 
ஆண்களில் நான் 
மோசமான மொழிபெயர்ப்பாளனாகவும்  
பெண்களில் நீ 
குழப்பமான மொழியாகவும்
தொடர்கிறோம் 
இலக்கின்றி  
ஒரு
திட்டமில்லா 
பயணியைப்போல 
தேசாந்திரியாய் ..

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

 டக்கீலாவும்  கொஞ்சம்  உப்பும் ...

சுதந்திர தினத்தை 
கொண்டாடுகிறோம் 
காலையில் தேச பக்தி பாடல் 
கொஞ்சம் அனுஷ்காவுடனான 
உரையாடல் 
கொஞ்சம் பாடல்கள்
கொஞ்சம் சினிமா 
கொஞ்சம் உப்பு
கொஞ்சம் டக்கீலாவுடன் 
நிறைய சுதந்திரம் ..

உப்பு தடவிய 
குவளையில் லெமனுடன்
டக்கீலாவில் 
மிதந்து கொண்டிருக்கிறேன் .
சுதந்திர போதையுடன் ..

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011


 நான் 
ஒரு கல்லாய் இருக்கிறேன் 
அந்த தீவில் .

அந்த பெருங்கடலில் 
தீவாகவும்  இருக்கிறேன் 

அந்த பூமியில் 
நான் பெருங்கடலாய் இருக்கிறேன் 
சீற்றமுடன் .

அந்த பிரபஞ்சத்தில் 
ஒரு பூமியாய்
சுழல்கிறேன் 
வெகு நேரமாய் 

அந்த பால்வெளியில் 
ஒரு பிரபஞ்சத்தில் 
சுற்றி கொண்டிருக்கிறது 
ஒரு கல் .



மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் 
நனைகிறேன் ..
அழுக்கு மட்டும் 
போகவில்லை ...

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

செருப்பணியாத கால்கள்  .


கையசைவை கவனித்தல்
பொழுது போக்காய்
அமைந்ததை  போல 

செருப்பணியாத கால்கள் 
கவர்கின்றன .

சுத்தமான ,
அழுக்கேறிய ,
சதைபற்றுடன் ,
எலும்புகள் துருத்திய ,
சிலந்தி நரம்புகள் புடைத்த ,
வண்ணம் பூசிய நகங்களுடன் ,
வெட்டபடாத நகங்களுடன் ,
வெடித்த பாதங்களுடன்,
மருதாணி சிவப்புடன் 
சிவப்பு ,
கருப்பு ,
மாநிறம்,
வெள்ளை ...

 எப்போதும்  செருப்பனிந்தே 
செல்கிறேன் ..
செருப்பணியாத கால்களின் 
பார்வையில் படாமல் ..


கூடு கிழித்து வெளியேறும்

வண்ணத்து பூச்சி.

வலித்திருக்குமோ...


உறங்கும் வரை .

அறையின் மூலையில் 
அடுக்கி வைக்கப்பட்டுள்ளது 
என் /உன் 
பயங்கள் .

அறையின் மூலையில் 
குவிக்கப்பட்டுள்ளது 
என்/உன் 
மர்மங்கள் .

அறையின் மூலையில் 
கொட்டப்பட்டுள்ளது 
என்/உன் 
கேள்விகள் .

அறையின் மூலையில் 
தள்ளப்பட்டுள்ளது 
என்/உன்
கோபங்கள் .

அறை முழுவதும் மூலைகளாய் 
வடிவமைத்தது 
நீ/நான்.

வெளியில் நின்று கொண்டிருக்கிறேன் ..
உறங்கும் வரை .

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அந்த 
பட்டம் பூச்சியின் சிறகடிப்புக்காய் 
காத்திருக்கிறேன் 
மூச்சடக்கி .
ஏதேனும் 
தொடர் செயலாய்
நிகழுமென .

உன் பெயர் எனக்கு தெரிந்திருக்கவில்லை 
அது போலவே உனக்கும் .

கண்டுபிடி அல்லது 
கற்பனை செய் 
என்றாய் 
கண்டுபிடித்தலை விட 
கற்பனை செய்தல் கடினம் 
எனக்கு.

கற்பனையில் 
உன் பெயர் திரும்ப திரும்ப 
தட்டுபட ..

உன் பெயர் உனக்கு தேவையில்லை 
அதுபோலவே 
எனக்கும் .

-கோ.

ஞாயிறு, 31 ஜூலை, 2011


சனி, 30 ஜூலை, 2011

 சமசீர் கல்வி தேர்வுத்தாள் எப்படி இருக்க வேண்டும் .

சாம்பிள் :



1) மைசூர் போண்டா என்றவுடன் நினைவுக்கு வரும் ஊர் .
          அ) பெங்களூர்   ஆ) மைசூர்   இ ) வேலூர்  ஈ ) பாலூர் .


2) முடியும் -எதிர்பதம் என்ன என்பதை எழுத முடியுமா ?முடியாதா ?
       
          அ)முடியும்    ஆ) முடியாது .


3) திருநெல்வேலி அல்வா எந்த ஊரில் தயாரிக்கபடுகிறது ?


4) சமாதானப்பறவை பறவை எது ?
          அ) சிட்டுகுருவி   ஆ) காண்டாமிருகம் இ) புறா   ஈ )    ஈ



5) சிக்கன் பிரியாணி என்றவுடன் நினைவுக்கு வரும் பிராணி .
          அ) கோழி    ஆ)  மட்டன்  இ) மாடு


6) டாஸ்மாக் (TASMAC )  கடையில் விற்கப்படுவது எது /
           அ) நாட்டு சரக்கு   ஆ) சரக்கு  இ) லேகியம்  ஈ)  மருந்து .


7) புரட்சி தளபதி விஷால் நடித்து வெளிவந்த படம் 
           அ) இவன்-அவன் ஆ)அவன்-இவன்  இ) எவண்டா அவன் ஈ ) இவனாடா  அவன் .


8) கககபோ  -விரிவாக்கம் எழுதவும் .


9)மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது ?
           அ)கன்னியாகுமரி  ஆ) கும்பகோணம் இ)மதுரை .

10)தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் ?
            அ) டாக்டர் .ஸ்ரீநிவாசன்  ஆ) சாம் ஆண்டெர்சன்  இ) ரஜினி ஈ) லூஸ் மோகன் .
            
11) கீழ் கண்டவற்றில் எது விஜய் நடித்த படம் ?
             அ) குருவி  ஆ) சிட்டு குருவி  இ)மைனா  ஈ) காக்கா .
             

12) புல் பாயில்-ஆப் பாயில்  இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குக .

13)சிறு குறிப்பு வரைக : ஜில்பான்ஸ் 

14) தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முதல் பணி .
              அ)எதிர் கட்சியினரை சிறையில் அடிப்பது .
              ஆ)மக்களுக்கு சேவை செய்வது .
              இ)மக்களை மறப்பது .

15) தேர்தலில் இலவசமாக தரப்பட்டது ..
              அ) காண்டாமிருகம்   ஆ)ஆடு  இ) யானை எ) கொரங்கு 

16) சரியா /தவறா ?கண்டறிக .
           திருக்குறளை எழுதியவர் பெயர் திருவள்ளுவர் எனில் ,மணிமேகலையை எழுதியவர்  பெயர்  மணி ஆகும் .
                 அ) சரி  ஆ) தவறு .

17) சிறுகுறிப்பு வரைக ;
             அ) ஜில் 
              ஆ)ஜங்
              இ) ஜக்

18) விரிவான கட்டுரை எழுதுக .(இரண்டிற்கு மட்டும்)
             அ) டாஸ்மாக் -ன்  சரக்குகளும் ,சிறப்புகளும் .
             ஆ) நமீதாவின்  திரைவுலக சேவையும் ,தொண்டும்
.
19)திருக்குறளில் உள்ள அதிகாரத்தை கண்டுபிடி .
               அ)அறத்துப்பால்  ஆ)ஆவின் பால்  இ) பாதாம் பால் ஈ) மசாலா பால் 

20) கோடிட்ட  இடத்தை நிரப்பு .
                --------------- கோயில்மணி ,கோயில்மணி நான் கேட்டேன் .
              அ)டிங்டாங்   ஆ) டண்டணக்கா  இ ) கலகல  

21) தமிழில் மொழி பெயர்க்கவும் :
             அ)   அப்பாடக்கர் 
             ஆ) அகா துகா.

இன்னும் கொஞ்ச நாளைக்கு புத்தகம் தராம ,பள்ளிக்கூடம் நடந்தா ,மேலே இருக்குற கேள்விக்கு கூட பசங்க கோனார் நோட்ஸ் வாங்கி தான் பிட் அடிக்கணும் .

வாழ்க சமசீர் கல்வி .....வாழ்க ஜனநாயகம் ...வாள்க தமில் ??
               
               

          

சனி, 11 ஜூன், 2011

ஆணி

எழுத்து என்னை எப்போதும் ஒரு மாய சிலந்தியை போல ,கருந்துளையை போல இழுத்துகொண்டேதான்  இருந்திருக்கிறது .

ஆனால் இன்று வரையும்  அதற்கான முயற்சி தொடங்கபடவே  இல்லை  .நேரமின்மை  என்று சொன்னால் கடிகாரம் சிரிக்கும். 

ஒவ்வொரு முறையும் எழும் சந்தேகம் ...

௧)என்ன எழுதுவது ?
௨) எந்த நடையைப் பயன்படுத்துவது ( இலக்கிய நடையா ,பேச்சு நடையா அல்லது இரண்டையுமா ?)
௩) யாரை போல எழுதுவது ? 
௪) யாருக்காக எழுதுவது ?
௫) ஏன்?

இதுவரை தொடங்கிய இரண்டு வலைபூவிற்கும்  மூடு விழ நடத்திய  பின்னும் ....இன்னமும் தீரவில்லை ..

  ஏன்,எதற்கு ,எப்படின்னு  யோசிசிகிட்டு இருக்கும் போதே ...மண்டைக்குள் ஒரு குரல் ..

நீ

 " ஆணியே புடுங்க வேணாம் "(Hallucination ..??)


ஓகே ..அடுத்த முறை கொஞ்சம் detailaa பாக்கலாம் ...ஆணி பிடுங்குவது எப்படின்னு :).